காட்டு யானைகளை விரட்ட கோரி ஆர்ப்பாட்டம்


காட்டு யானைகளை விரட்ட கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2021 8:32 PM IST (Updated: 11 Dec 2021 8:32 PM IST)
t-max-icont-min-icon

காட்டு யானைகளை விரட்ட கோரி ஆர்ப்பாட்டம்

கூடலூர்

தேவர்சோலை அருகே காட்டு யானைகளை விரட்ட கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

காட்டு யானைகள் அட்டகாசம் 

கூடலூர் தாலுகா பாடந்தொரை, தேவர்சோலை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புறங்களில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட பொதுமக்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளது. ஆனால் சேதமடைந்த வீடுகளுக்கு இதுவரை வனத்துறை சார்பில் இழப்பீடு தொகையும் வழங்கவில்லை.

தொடர்ந்து காட்டு யானைகள் வீடுகள், கடைகள், விவசாய பயிர்களை சூறையாடி வருகிறது. இதனால் காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கும்கி யானைகள் உதவி யுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.
 இருப்பினும் யானைகளின் அட்டகாசத்தை தடுக்க முடியவில்லை.

கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் தேவர்சோலை அருகே 3 டிவிஷன் பகுதியில் காட்டு யானைகளை விரட்ட கோரியும், வனத்துறையை கண்டித்தும்  பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விஜயகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜோஸ், முஸ்தபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடலூர் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது வனத்துறை தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதை கிராம மக்கள் ஏற்கவில்லை. காட்டு யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் அறிவித்தனர். 

தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.


Next Story