மீட்பு பணிக்கு உதவிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்


மீட்பு பணிக்கு உதவிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 11 Dec 2021 8:38 PM IST (Updated: 11 Dec 2021 8:38 PM IST)
t-max-icont-min-icon

மீட்பு பணிக்கு உதவிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்

ஊட்டி

குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிக்கு உதவிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை கலெக்டர் எஸ்.பி.அம்ரித்  வழங்கினார். 

நிவாரண பொருட்கள்

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிக்கு அனைத்து உதவிகளையும் செய்த நஞ்சப்பசத்திரம் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காட்டேரி தோட்டக்கலை பண்ணை வளாகத்தில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி 60 குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு தலா 20 வகையான மளிகை பொருட்கள், ஒரு போர்வை ஆகியவற்றை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நஞ்சப்பசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த போது, அனைத்து மக்களும் சேர்ந்து மீட்புப் பணிக்கு வீடுகளில் இருந்து கம்பளிகள், வாளி, தண்ணீர் போன்றவற்றை கொடுத்து தீயை அணைக்க உதவி செய்தனர். 

கோாிக்கை மனுக்கள் 

நீங்கள் செய்த உதவிக்கு எந்த வசதிகள் செய்து கொடுத்தாலும் ஈடாகாது. உங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட நிர்வாகம் மூலம் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது. உங்களிடம் குறைகள் இருந்தால் கேட்டறிந்து நிவர்த்தி செய்யப்படும். அரசு திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு வந்து சேரும்.

அனைத்து நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும். குறைகளுக்கு ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. 

கலெக்டர் ஆய்வு 

அதன் பின்னர் கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, ஹெலிகாப்டர் விபத்து குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story