மக்கள் நீதிமன்றம் மூலம் 659 வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் 659 வழக்குகளுக்கு தீர்வு
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 659 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நீலகிரி மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த முகாமை முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து அவர் பல்வேறு வழக்குகளுக்கு சமரசம் செய்து வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ஸ்ரீதர், குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிராஜன், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முருகேஷ் ஆகியோர் கலந்துகொண்டு நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளை எடுத்துக் கொண்டு சமரச தீர்வு கண்டனர்.
659 வழக்குகளுக்கு தீர்வு
கோத்தகிரி நீதிமன்றத்தில் உரிமையியல் நீதிபதி ஜெயபிரகாஷ் தலைமை யிலும், குன்னூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி லிங்கம் தலைமையிலும், கூடலூர் நீதிமன்றத்தில் சார்பு நீதிபதி வெங்கட சுப்பிரமணியம் தலைமையிலும், பந்தலூர் நீதிமன்றத்தில் கூடுதல் உரிமையியல் நீதிபதி பிரகாசம் தலைமையிலும் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
மக்கள் நீதிமன்றத்தில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 1,063 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 606 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 கோடியே 21 லட்சத்து 32 ஆயிரத்து 419 ஆகும். வங்கிகளின் வாராக்கடன் சம்பந்தமான 225 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அதில் 53 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.
அதன் மதிப்பு ரூ.2 கோடியே 8 லட்சத்து 79 ஆயிரத்து 757 ஆகும். மொத்தம் 1,288 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 659 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 256 ஆகும்.
Related Tags :
Next Story