கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்


கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 11 Dec 2021 8:46 PM IST (Updated: 11 Dec 2021 8:46 PM IST)
t-max-icont-min-icon

கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்

தளி, 
உடுமலை நகராட்சி பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலத்த மழை
உடுமலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுநீரை கொண்டு செல்வதற்காக சாலை தோறும் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது.
அதில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளாததால் சேதமடைந்து விட்டது. கால்வாய்களை குறித்த காலத்தில் சீரமைப்பதற்கும், புதுப்பிப்பதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உடுமலை பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது. 
கால்வாய்கள் தூர்வாரப்பட்டது
அப்போது மழைநீர் கால்வாயில் செல்லாமல் கழிவுநீருடன் கலந்து சாலையில் வெளியேறி வந்ததால் பொதுமக்கள் வாகனஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். அதைத்தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அப்போது அடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் தூர் வாரப்பட்டது.  
அதில் 30-வது வார்டுக்கு உட்பட்ட கோமதிநகர் பகுதியும் அடங்கும். இந்த சூழலில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து விட்டதால் கழிவுநீர் கால்வாய் பராமரிப்பு பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சேதமடைந்த பகுதியை கடந்து செல்ல முடியாமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகளிடம் தகவல்   தெரிவித்தும் நடவடிக்கை   எடுக்கவில்லை.எனவே உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story