நஞ்சப்பசத்திர மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


நஞ்சப்பசத்திர மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 11 Dec 2021 8:49 PM IST (Updated: 11 Dec 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

நஞ்சப்பசத்திர மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

குன்னூர்

குன்னூர் அருகே வண்டிச்சோலை ஊராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பசத்திரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த பின்னர் அப்பகுதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில், நஞ்சப்பசத்திரம் பகுதி பொதுமக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர்கள், செவிலியர்கள் பொதுமக்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டனர். சளி, இருமல், காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை நடத்தப்பட்டது. 

மேலும் மக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தடுப்பூசி செலுத்தாத மக்களுக்கு தடுப்பூசி செலுத்தவும், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் பயனடைந்தனர். இந்த சிறப்பு முகாமை குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் ஹாஜிரா பேகம் பார்வையிட்டனர்.

மேலும் குடியிருப்பு பகுதியில் சுகாதார பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மழைநீர் கால்வாய்கள், வீடுகளைச் சுற்றிலும் பிளீச்சிங் பவுடர் போடப்பட்டு உள்ளது. மேலும் மழைநீர் கால்வாயில் படிந்து இருந்த மண், செடிகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story