தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் தேவை
பழனி அருகே வரதமாநதி அண்ணாநகரில் தெருக்கள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் நடுத்தெருவில் கழிவுநீர் செல்கிறது. எனவே சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமகிருஷ்ணன், பழனி.
சாலையில் தேங்கும் மழைநீர்
திண்டுக்கல் பேகம்பூரில் சாரல் மழை பெய்தால் கூட சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. கனரக வாகனங்கள் தண்ணீரை இரைத்து செல்வதால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி செல்கின்றனர். மேலும் பள்ளி மாணவிகள் மழைநீரில் இறங்கி நடக்க வேண்டியது இருப்பதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கு வசதி செய்ய வேண்டும்.
-அப்துல்லத்தீப், பேகம்பூர்.
சாக்கடை கால்வாய் வசதி
தேனி மாவட்டம் வீரபாண்டியில் கூட்டுறவு வங்கிக்கு பின் பகுதியில் இருக்கும் குடியிருப்பில் முறையாக சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் நடுத்தெருவில் செல்கிறது. மேலும் முறையான சாலை வசதியும் இல்லாமல் மழைக்காலத்தில் தெரு சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுவதை தடுக்க சாலை, சாக்கடை கால்வாய் வசதி செய்து தருவார்களா? -முருகன், வீரபாண்டி.
மாடுகளுக்கு காணை நோய்
வேடசந்தூர் தாலுகா ஏ.சித்தூரில் பல மாடுகளுக்கு காணை நோய் அறிகுறி உள்ளது. இதனால் மாடுகளை வளர்ப்பவர்கள் கவலை அடைந்து உள்ளனர். எனவே கால்நடை பராமரிப்பு துறையினர் சிறப்பு முகாம் நடத்தி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
-குமரேசன், ஏ.சித்தூர்.
மின்கம்பத்தால் விபத்து அபாயம்
நிலக்கோட்டை தாலுகா எத்திலோடு அருகே புல்லக்காடுபட்டியில் சிலுக்குவார்பட்டி செல்லும் சாலையில் புதிதாக நடப்பட்ட மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்கம்பம் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக இரும்பு கம்பியை நட்டு வைத்துள்ளனர். ஆனால் மின்கம்பம் எந்தநேரத்திலும் விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சரியாக நடவேண்டும். இதற்கு மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கண்ணன், புல்லக்காடுபட்டி.
Related Tags :
Next Story