கர்ப்பத்தை கலைக்க மாத்திரை தின்ற பிளஸ்-1 மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி

கர்ப்பத்தை கலைக்க மாத்திரை தின்ற  பிளஸ்-1 மாணவி ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 11 Dec 2021 9:50 PM IST (Updated: 11 Dec 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கர்ப்பத்தை கலைக்க மாத்திரை தின்றதால் பிளஸ்-1 மாணவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் அவருடைய காதலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்,

பிளஸ்-1 மாணவி கர்ப்பம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஆறுகுடிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 20). கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-1 மாணவியை காதலித்து உள்ளார். இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது மலைச்சாமி அங்கு சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இது பற்றி அந்த மாணவி தனது காதலன் மலைச்சாமியிடம் கூறி உள்ளார். இதையடுத்து அவர் கர்ப்பத்தை கலைக்க மாத்திரை வாங்கி கொடுத்து உள்ளார்.

போக்சோ சட்டத்தில் கைது

அந்த மாத்திரையை தின்ற அந்த மாணவிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அந்த மாணவியை சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த போது, மாணவி கர்ப்பத்தை கலைக்க மாத்திைர தின்றது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவியின் தாயார் திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சித்திரைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சவுதாம்மா ஆகியோர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மலைச்சாமியை நேற்று கைது செய்தனர்.

Next Story