திண்டுக்கல் அருகே மளிகை பொருட்களுடன் சாலையில் கவிழ்ந்த லாரி


திண்டுக்கல் அருகே மளிகை பொருட்களுடன் சாலையில் கவிழ்ந்த லாரி
x
தினத்தந்தி 11 Dec 2021 10:03 PM IST (Updated: 11 Dec 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மளிகை பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது.

வடமதுரை:
திண்டுக்கல்லில் இருந்து அரிசி மற்றும் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை, திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில் (வயது 40) என்பவர் ஓட்டினார்.
 திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி அருகே வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்த அரிசி, மளிகை பொருட்கள் சாலை முழுவதும் ஆங்காங்கே சிதறி விழுந்தன. இந்த விபத்தில் லாரி டிரைவர் செந்தில் காயமின்றி உயிர் தப்பினார். நடுரோட்டில் லாரி கவிழ்ந்ததால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ரோட்டில் சிதறிக்கிடந்த மளிகை பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்டு போக்கு வரத்தை சீர் செய்தனர்.

Next Story