செஞ்சியில் பரபரப்பு எதிர்ப்பை மீறி காதல் திருமணம்; இளம்பெண்ணை கடத்தி மொட்டையடித்த பெற்றோர் 2 போ் கைது
செஞ்சியில் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்தி சென்று பெற்றோர் மொட்டையடித்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெண்மணியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் யுவராஜா(வயது 29). இவரும், திண்டிவனம் அய்யந்தோப்பு பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 9-ந்தேதி அதிகாலை யுவராஜா தனது காதலியை செஞ்சி சிங்கவரம் ரங்கநாதா் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் அவரை காரில் கடத்தி சென்று விட்டதாக தொிகிறது.
2 பேர் கைது
மேலும் பெண்ணை அழைத்து சென்ற பெற்றோர், அவருக்கு மொட்டை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து யுவராஜா செஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் பெண்ணின் தந்தை, தாய், மாமா மற்றும் சகோதரர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் தந்தை மற்றும் மாமா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story