வர்த்தகர் சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம்


வர்த்தகர் சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2021 10:11 PM IST (Updated: 11 Dec 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை,

சிவகங்கையில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வலியுறுத்தி வர்த்தகர் சங்கம் சார்பில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

30 அமைப்புகள்

சிவகங்கை சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கம், வர்த்தகர் சங்கம், ஆசிரியர்கள் சங்கம், ஜமாத் கிறிஸ்தவ கூட்டமைப்பு, கல்லூரி ஆசிரியர் அமைப்பு, ஜேசிஸ் அமைப்பு, அரிமா சங்கம், ரோட்டரி சங்கம் உள்ளிட்ட 30 அமைப்புகள் இணைந்து தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் சட்டத்துறை அமைச்சர் உள்பட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேர்தல் நேரத்தில் முதல்-அமைச்சர் அறிவித்த வாக்குறுதியின்படி சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் சிவகங்கை நகரில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், மாவட்ட விரைவு நீதிமன்றம், போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு வழக்கில் விசாரிக்கும் நீதிமன்றம், தலைமை குற்றவியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்பட 17 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு பல நீதிமன்றங்களில் பயிற்சியும் வக்கீல்கள் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்றும் வலியுறுத்தி கோரிக்கை மனு அனுப்பினர்.

கடை அடைப்பு

இதனை தொடர்ந்து சிவகங்கை நகர் வர்த்தகர் சங்கம் சார்பில் சிவகங்கை பகுதியில் சட்டக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 11-ந்தேதி(அதாவது நேற்று) சிவகங்கையில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று சிவகங்கை நகரில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மருந்துகடைகள், பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடைவீதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
 

Next Story