திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் பாலியல் வழக்கை சி.பி.சி.ஐ.டி.ககு மாற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில், கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தாளாளர் ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி தாளாளருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும், மாதர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தின்போது தகராறு செய்தவர்களை கைது செய்ய வேண்டும், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, மாதர் சங்க நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும், கல்லூரி தாளாளர் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story