தேசிய மக்கள் நீதிமன்றம்; ஒரே நாளில் 280 வழக்குகளுக்கு தீர்வு


தேசிய மக்கள் நீதிமன்றம்; ஒரே நாளில் 280 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 11 Dec 2021 10:30 PM IST (Updated: 11 Dec 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீிதிமன்றம் நடந்தது. இதில் ஒரே நாளில் 280 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் ஒரே நாளில் 280 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நேற்று லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதி மன்றம் நடந்தது. சப்-கோர்ட்டு நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட முன்சீப் முரளிதரன், மாஜிஸ்திரேட்டுகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், பர்வதராஜ் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 800 வழக்குகள் பரிசீலனைக்கு நேற்று எடுத்து கொள்ளப் பட்டது. 280 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் வங்கி வராக் கடன்கள் 40-க்கு ரூ.30 லட்சம் தீர்வு காணப்பட்டது. இதேபோல சிவில், மோட்டார் வாகனம் விபத்து இழப்பீட்டு தொகை வழக்குகள், பெட்டி வழக்குகள் என 240 வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 60 லட்சம் என தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதி மன்றத்தில் வக்கீல்கள் சந்திரசேகர், பாப்புராஜ், மோகன்தாஸ், நாகராஜன், சிவகுமார், பெரியதுரை, சட்டப் பணிகள் குழு உதவியாளர்கள் ஜோன்ஸ் மனுவேல், மரிக்கொழுந்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்

சாத்தான்குளம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக சாத்தான்குளம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் பட்டியல் வழக்கறிஞராக ஹெஸ்பின் லத்தீஸ் மற்றும் வழக்கறிஞர்கள் சாமுவேல், ரமேஷ்குமார், சுடலைமுத்து, க.வேணுகோபால், ரவிச்சந்திரன், சஷ்டி குமரன், பொன் செல்வம், ஜெய ரஞ்சினி, பயிற்சி வழக்கறிஞர் கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப வன்முறை சட்டம், வாகன விபத்து வழக்குகள் மற்றும் சிறு குறு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டன. நீதிமன்ற பணியாளர்கள், தலைமை எழுத்தர்கள் ராஜேந்திரன், சரவணமுத்து, சத்தியபாமா, முத்துலட்சுமி, மகேந்திரன், விஜய் கசமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story