பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
எட்டயபுரத்தில் பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எட்டயபுரம்:
எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் உருவச்சிலைக்கு அமைச்சர்கள் மற்றும் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் 140-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கனிமொழி எம்.பி., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு சார்பில் மரியாதை
முன்னதாக பாரதியார் பிறந்த இல்லத்திலும், மணிமண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கும் அரசு சார்பில் கலெக்டர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் சங்கரநாராயணன், எட்டயபுரம் தாசில்தார் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எம்.பி மற்றும் அமைச்சர்கள் வழங்கினார்கள். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Related Tags :
Next Story