வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொழிலாளி கைது
வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வளவனூர்,
சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒருவர், விழுப்புரம் மாவட்டம் வளவனூர் போலீஸ் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், ஒரு மணி நேரத்தில் அந்த வெடி குண்டு வெடிக்கும் என்றும் கூறினார். இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீசார் இதுபற்றி வளவனூா் போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன், அந்த நபர் பேசிய செல்போன் எண்ணையும் கொடுத்தனர். இதையடுத்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா அந்த செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் வளவனூர் அருகே பா.வில்லியனூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கூலி தொழிலாளி மாதவராஜ்(வயது 50) என்பது தெரியவந்தது.
சப்-இன்ஸ்பெக்டரை வெட்ட முயற்சி
பின்னர் இதுகுறித்து விசாரிப்பதற்காக சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார் மாதவராஜ் வீட்டுக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த மாதவராஜ் போலீசாரை ஆபாசமாக திட்டியதுடன், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணனை அரிவாளால் வெட்ட முயன்றதாகவும் தெரிகிறது. இதையடுத்து சக போலீசாா் மாதவராஜை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து மாதவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story