தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:04 PM IST (Updated: 11 Dec 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக முறையாக உரம் வினியோகம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக முறையாக உரம் வினியோகம் செய்யாததை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரங்கள்
முதுகுளத்தூர் அருகே பேரையூர், கொல்லங்குளம், செங்கோட்டை பட்டி, புல்வாய்குளம், சாமிபட்டி, கள்ளிகுளம், இலந்தைகுளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பேரையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக விவசாய பணிக்கு தேவையான யூரியா உர மூடைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் வினியோகிக்கப்பட்டு வந்தது. 
இந்த நிலையில் பேரையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக யூரியா உர மூடைகள் குறைந்த அளவில் வந்துள்ளதால் அவற்றை பெற அப்பகுதி விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். 
பரபரப்பு
அந்த உர மூடைகளை முறையாக வங்கி நிர்வாகம் வினியோகிக்கப்படாததை கண்டித்து விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் யூரியா உர மூடைகள் வந்தவுடன் முறையாக வினியோகிக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Next Story