சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேருக்கு அடி-உதை


சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேருக்கு அடி-உதை
x
தினத்தந்தி 11 Dec 2021 11:24 PM IST (Updated: 11 Dec 2021 11:24 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை வாலிபர்கள் பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி ெகாடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூர் அருகே சந்தனமரத்தை வெட்டி கடத்த முயன்ற 2 பேரை வாலிபர்கள் பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி ெகாடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சந்தன மரம்

வேலூர் அருகே உள்ள மேல்செங்காநத்தம் மலையில் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. அதில் சில சந்தன மரங்களும் வளர்ந்து காணப்படுகிறது. 

அங்குள்ள ஒரு முருகன் கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் ஒரு சந்தனமரத்தை வெட்டிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் இதை பார்த்து தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்தார். 

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து மரத்தை வெட்டிய 2 பேரையும் மடக்கி பிடித்து, தர்மஅடி கொடுத்து அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

 விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குடிபாலா, பாபா சமுத்திரம் பகுதியை சேர்ந்த சுதாகர் (வயது 45), கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை சேர்ந்த சாம்ராஜ் (43) என்பது தெரியவந்தது. 

அவர்கள் சில நாட்களாக இந்த பகுதியை நோட்டமிட்டதும், அங்கு வளர்ந்திருந்த சந்தனமரத்தை வெட்ட திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் விசாரணை

வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 கிலோ சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். 

அவர்கள் யாருக்காக? சந்தன மரங்களை வெட்ட வந்தனர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதியில் விலை மதிப்புமிக்க மரங்கள் ஏராளமாக உள்ளது. இவை பாதுகாக்கப்பட வேண்டும். 

வனத்துறையினர் இந்த பகுதியில் ரோந்து வருவதே கிடையாது. இனி வரும் நாட்களில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.

Next Story