விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி எரிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி எரிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2021 11:25 PM IST (Updated: 11 Dec 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கலசபாக்கம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி எரிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கலசபாக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த கடலாடி பஸ் நிறுத்தம் அருகாமையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பத்தில் இருந்த கொடியை அறுத்து மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.

இதனை கண்டித்து மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் கட்சியனர் கடலாடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கட்சி கொடியை எரித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி கோஷமிட்டனர். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் மற்றும் கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கட்சி கொடியை எரித்த மர்ம நபர்களை கைது செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். 

அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story