கடனை திருப்பிக்கேட்ட லாரி அதிபர் அடித்துக்கொலை


கடனை திருப்பிக்கேட்ட லாரி அதிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 11 Dec 2021 11:26 PM IST (Updated: 11 Dec 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே கடனை திருப்பிக்கேட்ட லாரி அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மெக்கானிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கடனை திருப்பிக்கேட்ட லாரி அதிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். மெக்கானிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

 ரூ.10 லட்சம் கடன்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சின்னவேப்பம்பட்டு வன்னிய அடிகளார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35), லாரிகளை வைத்து தொழில் நடத்தி வந்தார். 

இவர், சின்னவேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி மெக்கானிக் சங்கர் என்பவருக்கு கடனாக ரூ.10 லட்சம் கொடுத்ததாக தெரிகிறது. அதை திருப்பிக்கேட்டு வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 லாரி அதிபர் அடித்துக்கொலை

இந்தநிலையில் நேற்று சங்கர் வீட்டுக்கு சென்ற வெங்கடேசன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர் இரும்பு கம்பியால் வெங்கடேசனின் தலையில் தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்ைசக்காக வேலூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே வெங்கடேசன் பரிதாபமாக உயிரிழந்தார். 

 வலைவீச்சு

இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story