லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் சாலை மறியல்


லாரிகளை சிறைப்பிடித்து கிராமமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2021 11:26 PM IST (Updated: 11 Dec 2021 11:26 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே ஜல்லிகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஜல்லிகளை ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்குவாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் சுமார் 7 தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.

கல்குவாரியில் இருந்து லாரிகள் மூலம்  ஜல்லி, செயற்கை மணல், ஜல்லிதுகள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. 
காட்டுக்கொல்லை பகுதியில் இருந்து ரங்காபுரம், கென்னடிகுப்பம், விண்ணமங்கலம், அய்யனூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு ஜல்லி, செயற்கை மணல் கொண்டு செல்லப்பட்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கட்டுமான தொழில்களுக்கு வினியோகம் செய்து வருகின்றனர். 

சாலை மறியல்

இந்த நிலையில் காட்டுக்கொல்லை பகுதியில் தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதால் பள்ளி நேரங்களில் தங்களது பிள்ளைகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும்,  ஜல்லி துகள்கள் சாலைகளில் விழுந்து சாலையோரம் உள்ள வீடுகளில் ஜல்லி துகள்கள் நிரம்புவதால் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைகின்றனர்.

இதனால் நேற்று கல்குவாரிக்கு சொந்தமான லாரிகளை அப்பகுதி மக்கள் சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story