மாமியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருமகள் புகார்


மாமியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருமகள் புகார்
x
தினத்தந்தி 12 Dec 2021 12:32 AM IST (Updated: 12 Dec 2021 12:32 AM IST)
t-max-icont-min-icon

மாமியார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருமகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளித்தலை, 
குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் முருகேசன் மனைவி அன்புவள்ளி (வயது 65). இவர் குளித்தலை அருகே மணத்தட்டையில் உள்ள தனது மகன் சவுந்திரராஜன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். சவுந்திரராஜன் இறந்த பிறகு குளித்தலை அண்ணா நகரில் உள்ள தனது மகள் லோகேஸ்வரியுடன் கடந்த 2 மாதங்களாக வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலை அன்புவள்ளி இறந்து விட்டதாகவும் இந்த தகவலை உறவினர்களிடமோ, அக்கம்பக்கத்தினரிடமும் தகவல் தெரிவிக்காமல் அவசரம் அவசரமாக கரூரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்து சென்றதாக சவுந்திரராஜனின் மனைவி சிந்துஜா (27) என்பவருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனது மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சிந்துஜா குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அன்புவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story