ஒரேநாளில் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரேநாளில் 28 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் 14-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றன. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 2-வது தவணைக்கான காலம் வரப்பெற்றவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற முகாமிற்கு ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையிலான மருத்துவ குழுவினர் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி போட்டனர். இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.கரூரில் நேற்று நடைபெற்ற முகாம்களில் முதல் தவணை தடுப்பூசி 9 ஆயிரத்து 794 பேரும், 2-வது தவணை தடுப்பூசி 18 ஆயிரத்து 445 பேரும் என மொத்தம் 28 ஆயிரத்து 239 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 90.02 சதவீதமும், 2-வது தவணை தடுப்பூசி 53.24 சதவீதமும் செலுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story