கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சாலையில் அமர்ந்து பெண் போராட்டம்


கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி சாலையில் அமர்ந்து பெண் போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2021 12:43 AM IST (Updated: 12 Dec 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி குளித்தலை தாசில்தார் அலுவலக சாலையில் அமர்ந்து பெண் போராட்டம் நடத்தினார்.

குளித்தலை, 
சாலையில் அமர்ந்து போராட்டம்
குளித்தலை தாசில்தார் அலுவலக சாலையில் தனது மகளுடன் பெண் ஒருவர் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
லாரி டிரைவர்
விசாரணையில் அவர் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த சமீராபானு (வயது 34) என்பதும், இவருக்கும் குளித்தலை சிங்காரத்தோப்பு தெருவை சேர்ந்த லாரி டிரைவர் சாதிக் பாஷா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
திண்டுக்கல்லில் சமீராபானுவை தங்க வைத்துவிட்டு சாதிக்பாஷா வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். குடும்ப செலவிற்கு அவர் சரிவர பணம் கொடுப்பது இல்லை. 
போலீசார் அறிவுரை
இதனால் குளித்தலை சிங்காரத்தோப்பு தெருவில் உள்ள தனது கணவரின் தாய், தந்தையிடம் இது குறித்து கேட்கவந்தபோது அவர்கள் சாதிக் பாஷாவிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறி அனுப்பி உள்ளனர். எனவே தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அப்பெண்ணுக்கு அறிவுரைகூறி அனுப்பி வைத்துள்ளனர். தனது மகளுடன் பெண் ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story