வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் வெற்றி புறாக்களை பறக்க விட்டு நன்றி தெரிவித்த விவசாயிகள்


வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் வெற்றி புறாக்களை பறக்க விட்டு நன்றி தெரிவித்த விவசாயிகள்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:08 AM IST (Updated: 12 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் வானில் புறாக்களை பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது.

கபிஸ்தலம்:-

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்கியதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் வானில் புறாக்களை பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது.

போராட்டம் வெற்றி

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடி வந்தனர். இந்த நிலையில் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது. இதனால் விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டெல்லி எல்லையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். 
இந்த நிலையில் போராட்டத்தை வெற்றிகரமாக்கிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே ஏராகரம் கிராமத்தில் விவசாயிகள் புறாக்களை பறக்க விட்டனர். 

மெழுகுவர்த்தி ஏந்தி...

அப்போது நன்றியை தெரிவிக்க புறாக்களை தூது அனுப்புவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுந்தரவிமல்நாதன் தலைமை தாங்கினார். முன்னதாக விவசாயிகள் தேசிய கொடி கட்டிய டிராக்டர்களில் சுவாமிமலை அருகே உள்ள ஏராகரம் கிராமத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஏராளமான புறாக்களை பறக்கவிட்டனர். மேலும் போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். 

Next Story