சிலம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு
மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அரியலூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் மாநில அளவிலான போட்டிக்கு வீரர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, வேல் கம்பு, சுருள் வாள், வாள் கேடயம் ஆகிய 5-ல் ஏதாவது 3 பிரிவுகளை தேர்ந்தெடுத்து வீரர்கள் பங்கேற்கும் வகையிலும், 3 பிரிவுகளுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படும் வகையிலும் போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள், பெண்கள், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர்களுக்கு என தனித்தனி பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இவற்றில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story