ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மின் மோட்டார் திருட்டு; 2 பேர் கைது


ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மின் மோட்டார் திருட்டு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 1:18 AM IST (Updated: 12 Dec 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மின் மோட்டார் திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கணினி அறையில் அலுவலகக் கோப்புகள், மின்சாதன பொருட்கள், மோட்டார் பம்புகள் போன்றவை வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதில் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மின் மோட்டார் உதயநத்தம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 51) என்பவரது வீட்டின் பின்புறத்தில் இருப்பதாகவும், அதனை மீட்டுத் தரும்படியும் உதயநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா வீரப்பன் தா.பழூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். விசாரணையில் வேல்முருகன், இளவரசன்(51), கண்ணன் மகன் சங்கர் ஆகியோர் சேர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த மின் மோட்டாரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வேல்முருகன் வீட்டில் இருந்த மின் மோட்டாரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட வேல்முருகன், இளவரசன் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள சங்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story