தா.பழூரில் திடீர் மழை


தா.பழூரில் திடீர் மழை
x
தினத்தந்தி 11 Dec 2021 7:48 PM GMT (Updated: 2021-12-12T01:18:51+05:30)

தா.பழூரில் திடீரென மழை பெய்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டமாக இருந்து வந்தது. அதிக அளவு பனிப்பொழிவும் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை நேரத்தில் மேகம் இல்லாமல் தெளிந்த வானமாக இருந்தது. திடீரென கருமேகங்கள் வானில் திரண்டு காலை 10.30 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 20 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது. திடீரென மழை பெய்து பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story