தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Dec 2021 1:21 AM IST (Updated: 12 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

சாலை வேண்டும் 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா வன்னிக்கோட்டை காலனியில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக இருப்பதால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதில் நடந்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இங்கு சாலை அமைத்து தர வேண்டும். 
மதன், வன்னிக்கோட்ைட. 
துர்நாற்றம் 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த வெங்காநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்டது வெங்கடேஷ்வரா நகர். இங்குள்ள தெருக்களில் சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. கொசுத்ெதால்லையும் அதிகமாக உள்ளது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சின்னப்பன், ராஜபாளையம். 
வாகன ஓட்டிகள் அவதி 
மதுரை மாவட்டம் கே.புதூரில் கற்பக நகர் 4-வது தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலையானது சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சேற்றில் விழுந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
அப்பாஸ், கே.புதூர். 
நாய்கள் தொல்லை 
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. நாய்கள் தெருவில் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். நாய்க்கடியால் தினமும் பலர் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்துவார்களா? 
கண்ணன், தொண்டி. 
சாலையில் கழிவுநீர் 
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா ஆலங்குளம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. கழிவுநீர் செல்ல வழியின்றி இருப்பதால் சாலைகளில் ஓடுகிறது. இந்த வழியாக செல்லும் மாணவ, மாணவிகள் துர்நாற்றம் காரணமாக மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் நிலை உள்ளதால் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெகநாதன், ஆலங்குளம். 
சாலை சீரமைக்கப்படுமா? 
சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை ரஸ்தா அடுத்த காட்டம்மன் கோவிலில் இருந்து, சங்கந்திடல் வழியாக காரைக்குடி தெற்கு தெரு வரை செல்லும் சாலை மோசமான நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமான சாலையில் செல்லும் போது வாகனங்களும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. அவ்வப்போது விபத்துகளும் நடக்கிறது. எனவே, சாலையை சீரமைக்க வேண்டும். 
ராகவேந்திரன், அமராவதிபுதூர்.
சேறும், சகதியுமான சாலை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் செண்பகதோப்பு செல்லும் வழியில் உள்ள சக்திநகர் கிழக்கு தெருவில் சாலை வசதி இல்லை. மண் சாலையாக உள்ளது. தற்போது பெய்த மழையால் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி சாலையை சீரமைப்பார்களா?
 பொதுமக்கள், ராஜபாளையம். 
பன்றிகள் அட்டகாசம் 
மதுரை மாநகராட்சி புதுநத்தம் மெயின் ரோட்டில் திருப்பாலை பாக்கியலட்சுமி நகரில் தெருநாய்கள், பன்றிகள் அட்டகாசம் உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பன்றிகள் சாக்கடையில் உருண்டு, புரண்டுவிட்டு சேறும், சகதியுமாக தெருக்களில் சுற்றுவதால் சுகாதார சீர்கேடாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. 
பொதுமக்கள், பாக்கியலட்சுமி நகர், மதுரை. 

Next Story