மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் சாவு
x
தினத்தந்தி 12 Dec 2021 1:21 AM IST (Updated: 12 Dec 2021 1:21 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கல் மாதாங்கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யன். இவரது மனைவி கனகவள்ளி (வயது 32). கணவன் - மனைவி 2 பேரும் நேற்று மதியம் சங்கரன்கோவில் வழியாக கீழக்கலங்கலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.  சங்கரன்கோவில் - நெல்லை சாலையில் உள்ள குதிரைக்கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த கனகவள்ளி நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னக்கோவிலான்குளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story