18 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம்


18 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம்
x
தினத்தந்தி 12 Dec 2021 1:25 AM IST (Updated: 12 Dec 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்த 18 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.

சிவகாசி, 
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா நோய் பாதிப்பில் இறந்த  18 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ் கலந்து கொண்டு நிவாரண தொகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினார். அப்போது தாசில்தார் ராஜ்குமார், சமூக நலன் தனி தாசில்தார் ஆனந்தராஜ் ஆகியோர் இருந்தனர்.

Next Story