விபத்தில் வாலிபர் பலி


விபத்தில் வாலிபர் பலி
x
தினத்தந்தி 12 Dec 2021 1:37 AM IST (Updated: 12 Dec 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் அருகே விபத்தில் வாலிபர் பலியானார்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பாட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசந்திரன் மகன் அருண்குமார் (வயது 21) கூலி தொழிலாளி. இவரது உறவினர் ஜெயசங்கர் மகன் ஆகாஷ் (16). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கழுகுமலை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது எதிரே ஒரு லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. 

இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த அருண்குமார், ஆகாஷ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிேலயே அருண்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story