கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இனி பொது இடங்களில் அனுமதி கிடையாது


கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இனி பொது இடங்களில் அனுமதி கிடையாது
x
தினத்தந்தி 12 Dec 2021 1:38 AM IST (Updated: 12 Dec 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்குஇனி பொது இடங்களில் அனுமதி கிடையாது என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

மதுரை, 
கொரோனா நோய் பட்டியலிடப்பட்டதொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி சட்டப்பிரிவு 71 (1) ன்படி, இனிவரும் காலங்களில் பொதுமக்கள் நலன்கருதி மேற்படி தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்கள் சந்தைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு இடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், சத்திரம், லாட்ஜ்கள், கேளிக்கை விடுதிகள், டாஸ்மாக் பார்கள், ஆம்னி பேருந்துகள், தொழிற்சாலைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகிய பொது இடங்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் உரிமை யாளர்கள், நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு வணிக நிறுவனத்திலும் வாடிக்கை யாளர் வருகை குறித்து பதிவேடு பராமரித்து அதில் அந்த வாடிக்கையாளர் தடுப்பூசி செலுத்தியுள்ள விவரம் பதிவு செய்து கேட்டுக்கொள்ளப்பட்டது.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் வருகை புரியும் பட்சத்தில் அவர்களை வணிக வளாகத்திற்குள் அனுமதிக்காமல் அருகாமையில் உள்ள தடுப்பூசி முகாம் விவரத்தினை தெரிவித்து தடுப்பூசி செலுத்திய பின்னர் அதனை உறுதி செய்து அனுமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இது அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். இதனை காண்காணிக்க பல துறை அலுவலர்கள் அடங்கிய கண்காணிப்புக்குழு அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி வரப்பெறாத நிலையில் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகி இலவசமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். 
எனவே பொதுமக்கள் தங்களது பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு தவறாது சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா நோய் தொற்று 3-வது அலை பரவல் தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த தகவல் கலெக்டர் அனிஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Next Story