தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.3,500-க்கு விற்பனை


தோவாளை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ   ரூ.3,500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 12 Dec 2021 2:05 AM IST (Updated: 12 Dec 2021 2:05 AM IST)
t-max-icont-min-icon

தோவாைள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆரல்வாய்மொழி, 
தோவாைள பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகை பூ
நாகர்கோவிலை அடுத்த தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நெல்லை, மதுரை உள்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம் குமரி மாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து பூக்களை வாங்கி செல்கிறார்கள். இதனால் காலையில் பூ மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதும்.
இங்கு பூக்களின் விலை சூழ்நிலைக்கு ஏற்ப ஏறி, இறங்கும் தன்மை உடையது. பண்டிகை காலங்களில் பூக்கள் விலை அதிகமாகவும், மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கும். ஆனால் நேற்று மல்லிகைப்பூ விலை அதிகமாக, அதாவது ஒரு கிலோ ரூ.3,500-க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் இதே மல்லிகைப்பூ ரூ.1,800-க்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
வரத்து குறைவு
மல்லிகை பூ விலை உயர்வு குறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமாரிடம் கேட்ட போது, ’மல்லிகைப்பூ விலை உயர்வுக்கு முகூர்த்த நாட்கள் காரணமாக இருந்தாலும், பனிப்பொழிவினால் பூக்கள் வரத்து குறைந்தது, அதே சமயம் தேவையும் அதிகமாக இருந்ததே முக்கிய காரணமாகும்’ என்றார்.
மற்ற பூக்களின் விலை கிலோவுக்கு வருமாறு:-
அரளி ரூ.450, பிச்சி ரூ.,1,500, முல்லை ரூ.1,400, சம்பங்கி ரூ.200, கனகாம்பரம் ரூ.1000, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30, கோழிப்பூ ரூ.80, பச்சை ஒரு கட்டு ரூ.10, ரோஜா (100 எண்ணம்) ரூ.50, பட்டன் ரோஸ் ரூ.320, ஸ்டெம்பு ரோஸ் ஒரு கட்டு ரூ.400, மஞ்சள் கேந்தி ரூ.120, சிவப்பு கேந்தி ரூ.150, சிவந்தி (மஞ்சள்) ரூ.200, வெள்ளை சிவந்தி ரூ.220, கொழுந்து ரூ.150, மருக்கொழுந்து ரூ.170, தாமரை ஒரு எண்ணம் ரூ.20 என விற்பனை செய்யப்பட்டது.

Next Story