போலீஸ் தேடிய வாலிபர் திருச்சி கோர்ட்டில் சரண்


போலீஸ் தேடிய வாலிபர் திருச்சி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 12 Dec 2021 2:10 AM IST (Updated: 12 Dec 2021 2:10 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் தேடிய வாலிபர் திருச்சி கோர்ட்டில் சரண்

திருச்சி, டிச.12-
தஞ்சை மாவட்டம் தோகூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன் தோகூர் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தினர். ஆனால் அவர் நிற்காமல் சென்றார். விசாரணையில் அவர் துவாக்குடியை சேர்ந்த சாந்தகுமார் (வயது 20) என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் தேடுவதை அறிந்த சாந்தகுமார், நேற்று முன்தினம் திருச்சி ஜே.எம்.கோர்டில் மாஜிஸ்திரேட் திரிவேணி முன்  சரணடைந்தார். விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட், சரணடைந்த சாந்தகுமாருக்கு நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிட்டதை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story