பிபின் ராவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி


பிபின் ராவத்துக்கு எதிராக கருத்து பதிவிட்ட சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2021 2:23 AM IST (Updated: 12 Dec 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

பிபின் ராவத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பிபின் ராவத் மரணம்

  நமது நாட்டின் முப்படைக்கு தளபதியான பிபின் ராவத் மரணத்தை கொண்டாடி சில சமூகவிரோதிகள், சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி நம்மை விட்டு ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிர் இழந்திருக்கிறார்.

  பிபின் ராவத் மரணத்தை கொண்டாடிய சமூக விரோதிகளை சிறிது தாமதிக்காமல் கண்டுபிடிக்கும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்று கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பிபின் ராவத்தின் மரணம் இந்த நாட்டுக்கு பெரும் இழப்பாகும்.

குளிர்கால கூட்டத்தொடரில்...

  கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த தற்போது மட்டும் அரசு முடிவு செய்யவில்லை. இதற்கு முன்பே சட்டசபை கூட்டத்தொடரின் போது மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்திருந்தது.

  ஆனால் சில சட்ட பிரச்சினைகள் காரணமாகவும், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவும் அந்த சட்டத்தை அமல்படுத்த தாமதம் உண்டானது. பெலகாவி சுவர்ணசவுதாவில் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரின் போது மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறது.
  இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

Next Story