வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் மனு
வழக்கை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் மனு செய்துள்ளார்.
மதுரை,
மதுரை திருப்பாலையை சேர்ந்த மாரிதாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறேன். சமூக சிந்தனையுடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான ஆவணங்களை சேகரித்து அதுசம்பந்தமான பொதுவான எனது கருத்துகளை பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறேன். இதில் எப்போதும் தனிப்பட்ட முறையில் கருத்துகளை பதிவிடவில்லை. இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி இந்திய முப்படைத்தளபதி இறந்தது குறித்து யாரும் தேவையின்றி கருத்துகளை பதிவிட வேண்டாம் என டுவிட்டரில் தெரிவித்தேன். இதுதொடர்பான புகாரின்பேரில் போலீசார் என் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். தவறான புகாரின்பேரில் இந்த வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்பேரில் என்னை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து எனது குடும்பத்தினருக்கு கூட முறையான தகவல் தெரிவிக்கவில்லை. என் மீது வழக்கு பதிவு செய்வதிலும், கைது நடவடிக்கையிலும் சட்டத்தை பின்பற்றவில்லை. எனவே என் மீதான வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Related Tags :
Next Story