தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது


தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 5 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 5:22 PM IST (Updated: 12 Dec 2021 5:22 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்தவர்கள் உள்பட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்தவர்கள் உள்பட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்தவர் மூக்காண்டி. இவருடைய மகன் மாரிமுத்து (வயது 26), வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக்ராஜா (21) ஆகியோரை தென்பாகம் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். இதே போன்று காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல்ரசாக் மகன் சதாம் உசேன் என்ற சிலிண்டர் (30) என்பவரை ஆறுமுகநேரி போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.
இதே போன்று திருச்செந்தூர் மார்க்கெட் ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக, நெல்லை மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்த சண்முகம் மகன் இசக்கிராஜா (31), தழையூத்தை சேர்ந்த பரமசிவன் மகன் பிரபாகரன் (35) ஆகியோரை திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இவர்கள் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததால், 5 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், மாரிமுத்து, கார்த்திக் ராஜா, சதாம் உசேன் என்ற சிலிண்டர், இசக்கிராஜா, பிரபாகரன் ஆகிய 5 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகளில் ஈடுபட்ட 22 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 20 பேர் உள்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 182 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Next Story