கயத்தாறு அருகே ஓடை மணல் திருடிய 4 பேர் கைது


கயத்தாறு அருகே ஓடை மணல் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2021 5:26 PM IST (Updated: 12 Dec 2021 5:26 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே மினி லாரியில் ஓடை மணல் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்

கயத்தாறு:
கயத்தாறு அருகே மினி லாரியில் ஓடை மணல் திருடிய 4  பேரை போலீசார் கைது செய்தனர். மினி லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மணல் திருட்டு
கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியிலுள்ள ஓடையில் சிலர் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் மற்றும் போலீசார் ஓடைப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது ஓடையில் மினி லாரியில் மணல் திருடிக் கொண்டு இருந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், நெல்லை மாவட்டம் கலப்பாங்குளம் குளம் கிராமத்தை சேர்ந்த ராமர் பாண்டி மகன் சுப்பையா என்ற மகாராஜன் (வயது 40), களப்பாகுளம் கிராமத்தைச் சேர்ந்த குருசாமி பாண்டியன்(38), புன்னைவனம் என்ற பொன்ராஜ்(26), ராஜா(40) ஆகியோர் என தெரிய வந்தது.
4 பேர் கைது
இது குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த4 பேரையும் கைது செய்தனர். 
மேலும் மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story