கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறல்


கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 12 Dec 2021 8:53 PM IST (Updated: 12 Dec 2021 8:53 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறல்

கோவை

கோவையில் கொள்ளை வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

கொள்ளை சம்பவங்கள்

கோவை மாநகரில் சமீபகாலமாக குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில் நகரில் பல இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி மொத்தம் 600 பவுன் நகைகள் வரை கொள்ளையடித்து உள்ளனர்.

கோவை சுங்கம் பகுதியில் கடந்த மாதம் வீடு புகுந்து வயதான தம்பதியை தாக்கி 19 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட் டது. இதில் தொடர்புடைய 4 பேரை போலீசாரால் இன்னும் கண்டறிய முடிய வில்லை.

பொதுமக்கள் அச்சம்

இது தவிர போலீஸ் குடியிருப்பில் நடைபெற்ற திருட்டு, காட்டூர், சிங்காநல்லூர் பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்கிலும் சம்பந்தப் பட்ட நபர்கள் பிடிபட வில்லை. துடியலூர் பகுதியில் ரூ.1 கோடி வைர நெக்லஸ் கொள்ளை போன சம்பவத்திலும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வில்லை. 

ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை என மாநகரில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

போலீசார் திணறல்

சில கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களின் உருவங்கள் அங்கிருந்த கண்காணிப்புகேமராக்களில் பதிவாகி உள்ளது. ஆனால் கொள்ளையர்கள் முகக்கவசம் அல்லது முகமூடி அணிந்து வருகின்றனர். 

அதோடு கண்காணிப்பு கேமராக்களை மேல் நோக்கி திருப்பி வைப்பது, துணியை போட்டு மூடுவது என புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர். இதனால் கொள்ளையர்களை அடையாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 

கைது செய்ய நடவடிக்கை

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
சுங்கம் அருகே தம்பதியை தாக்கிய கொள்ளையடித்த 4 பேரும் முகமூடி மற்றும் கையுறையும் அணிந்து உள்ளனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்களும் இல்லாததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டுகின்றனர். 

எனவே மாநகர பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவு நேரரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், சந்தேகத்திற்கிடமான நபர்களை பிடித்து விசாரித்து வருகிறோம். மேலும் பழைய குற்றவாளிகள் மற்றும் கிடைத்த தடயங்களின் அடிப் படையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story