திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்


திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Dec 2021 9:46 PM IST (Updated: 12 Dec 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

திருமூர்த்தி அணையில் இருந்து முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்

பொள்ளாச்சி

திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு வரும் 25-ந்தேதி முதல் தண்ணீர் திறக்க வேண்டும். என, பி.ஏ.பி., விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம்

(பி.ஏ.பி.) திட்டத்தில் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விவசாயிகளின் நலன் கருதி 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு நன்கு பெய்த பருவமழை காரணமாக பி.ஏ.பி., அணைகளில் நீர்மட்டம் உயர்ந்ததால் கடந்த ஆகஸ்டு் மாதம் 3-ந்தேதி, நான்காம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த பாசன சுற்று நிறைவடைவதால், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு எப்போது? என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். 
இந்தநிலையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல்பரமசிவம் மற்றும் விவசாாயிகள் சிலர் பொள்ளாச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பி.ஏ.பி., தலைமை பொறியாளர் முத்துசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். 

அரசாணை பெற்று தண்ணீர் திறப்பு

இதுகுறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம் நிருபர்களிடம்கூறியதாவது:-
4-ம் மண்டல பாசனத்துக்கு வரும் தண்ணீர் 16-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, முதலாம் மண்டல பாசனத்துக்கு வருகிற 25-ந் தேதி முதல், ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு, அவர் கூறினார்.
பி.ஏ.பி., தலைமை பொறியாளர் கூறுகையில், முதலாம் மண்டல பாசனத்துக்கு அரசாணை பெற்று தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story