தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
தூத்துக்குடியில் பாஜனதா கட்சியினர் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்
தூத்துக்குடி:
தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படும் தி.மு.க அரசை கண்டித்து வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில், கட்சி அலுவலகம் முன்பு நேற்று வாயில் கருப்பு துணி கட்டி மவுன போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது கோரிக்கை அடங்கிய போர்டுகளை ஏந்தி பிடித்து இருந்தனர்.
போராட்டத்தில் மாவட்ட பொது செயலாளர் பிரபு, மாவட்ட செயலாளர்கள் மான்சிங், ரவிச்சந்திரன், வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர
Related Tags :
Next Story