தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 Dec 2021 9:57 PM IST (Updated: 12 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

கம்பம் அகற்றப்பட்டது
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் உள்ள நடைபாதையில் ஒரு தொலைபேசி கம்பம் ஆபத்தான நிலையில் சாய்ந்து நின்றது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வந்தனர். இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் இடையூறாக இருந்த கம்பத்தை அகற்றினர். செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
சாலையில் வீணாகும் குடிநீர்
கருங்கல் அருகே உள்ள திருஞானபுரம் பகுதியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்வதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, குழாய் உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                          -எஸ்.சுனில்குமார், கருங்கல்.
சாலை சீரமைக்கப்படுமா?
பாலூரில் இருந்து மூசாரி வழியாக கருங்கல், மார்த்தாண்டம்  செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
                                                                        -இன்பன்ட் தாஸ், இனயம்.
நிரந்தர தீர்வு காணப்படுமா?
கன்னியாகுமரியில் இருந்து கருங்கல் வழியாக திருவனந்தபுரத்துக்கு மேற்கு கடற்கரை சாலை செல்கிறது. இந்த சாலையில் கருங்கல் சுண்டவிளையில் சாலையோரத்தில் உள்ள கால்வாயின் கரைப்பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. தற்போது, சாலையோரத்தில் பாறைப்பொடி மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் சேதமடைந்த பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.                                                      
                                                                            -ஆர்.ஜார்ஜ்,கருங்கல்.   
சுகாதார சீர்கேடு
சுசீந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மணவிளையில் இருந்து வழுக்கம்பாறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாசானசாமி கோவில் செல்லும் பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                      -கேசவன், வழுக்கம்பாறை.
விபத்து அபாயம்
அஞ்சுகிராமத்தில் இருந்து வழுக்கம்பாறை வழியாக நாகர்கோவில் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் சகாயபுரம் கிறிஸ்தவ ஆலயம் அருகில் சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
                                                                -முகமது ஜாசிர், இடலாக்குடி.




Next Story