நோய் தாக்கி வெங்காய விளைச்சல் பாதிப்பு


நோய் தாக்கி வெங்காய விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Dec 2021 10:19 PM IST (Updated: 12 Dec 2021 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் பகுதியில் நோய் தாக்கியதில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

வேடசந்தூர் : 

வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை, ஆத்தூர் பிள்ளையூர், வைவேஸ்புரம், புதுரோடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 200 ஏக்கருக்கு சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர். இன்னும் 30 நாளில் அறுவடை செய்ய தயாரான நிலையில் தொடர் மழை பெய்ததால் வெங்காய பயிரில் திடீரென்று திருகல் நோய் ஏற்பட்டது. இதனால் செடியின் நுனி பகுதி கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, சின்ன வெங்காயம் அதிக விலைக்கு விற்பனையாகும் என்று எதிர்பார்த்து எங்கள் சுற்றுப்புற கிராமப்பகுதி விவசாயிகள் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிட்டு இருந்தோம்.

இது வரை ஒரு ஏக்கருக்கு ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 
எனவே மாவட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்றனர்.

Next Story