‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சுகாதாரக்கேடு
பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியை சேர்ந்த சீனிவாசநகர் 3-வது கீழத்தெருவில் சாைல குண்டும் குழியுமாக உள்ளது. அங்கு தேங்கிய மழைநீர் நீண்ட நாட்களாக வடியாததால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மழைநீரை வடிய வைக்கவும், சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமார், சீனிவாசநகர்.
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
பாளையங்கோட்டை அருகே திடியூர்- நெல்லை சந்திப்பு இடையே அரசு டவுன் பஸ் (வழித்தட எண்- 10 ‘டி’) காலை, மாலையில் இயக்கப்பட்டது. இதனை மாணவ-மாணவிகள் பெரிதும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த பஸ் கடந்த சில மாதங்களாக இயக்கப்படவில்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- குமார், திடியூர்.
சேதமடைந்த சாலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி டோல்கேட், எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ளிட்ட இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- அப்துல் ரகுமான், புளியங்குடி.
காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி
ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் தெற்கு தெருவில் உள்ள குடிநீர் தொட்டி கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் பயன்பாடற்று காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சீரமைத்து மீண்டும் அதில் தண்ணீரை நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- லட்சுமணன், மருதம்புத்தூர்.
அந்தரத்தில் தொங்கும் தடுப்பு கம்பிகள்
செங்கோட்டை- வல்லம் ரோடு அனுமன் நதிக்கரையோரம் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. தற்போது மழையில் மண் அரித்து செல்லப்பட்டதால் இரும்பு கம்பிகள் அந்தரத்தில் தொங்கியவாறு உள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு மண்மூட்டைகளை அடுக்கி வைத்து இரும்பு கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
- கணேசன், செங்கோட்டை.
சாலை அமைக்கப்படுமா?
கடையநல்லூர் நகராட்சி 24-வது வார்டு கற்பகசுந்தர விநாயகர் கோவில் தென்வடல் தெருவில் சாலை அமைக்கப்படவில்லை. அந்த தெருவின் குறுக்காக அமைக்கப்பட்ட வடிகால் பாலமும் உயரமாக உள்ளதால், அதன் இருபுறமும் சாலையில் பள்ளமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்குகிறது. எனவே அங்கு வடிகால் பாலத்துக்கு இணையாக புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாடசாமி, கடையநல்லூர்.
திறந்து கிடக்கும் வாறுகால்
கடையநல்லூர் நகராட்சி 17-வது வார்டு வாணுவர் தெருவில் வாறுகாலில் கழிவுநீர் வழிந்தோடாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் வாறுகால் திறந்து கிடப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. அப்பகுதியில் 4 பள்ளிக்கூடங்களும் உள்ளன. எனவே வாறுகாலில் உள்ள அடைப்புகளை அகற்றி கழிவுநீர் வழிந்தோடவும், வாறுகாலுக்கு காங்கிரீட் மூடி அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
- இக்பால், கடையநல்லூர்.
தெருவிளக்கு எரியவில்லை
தூத்துக்குடி மாநகராட்சி 35-வது வார்டு புதுக்குடி 2-வது தெருவில் உள்ள மின்கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு மின்விளக்கு எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மருதப்பெருமாள், தூத்துக்குடி.
வீடுகளை சூழ்ந்த மழைநீர்
செய்துங்கநல்லூர் அருகே விட்டிலாபுரம் பஞ்சாயத்து மேலநாட்டார்குளம் தமிழன் நகரில் வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் பல நாட்களாக வடியாததால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே தேங்கிய மழைநீரை வடிய வைப்பதுடன் அங்கு சாலை, வாறுகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- மணி, தமிழன் நகர்.
சேறும் சகதியுமான தெருக்கள்
தூத்துக்குடியை அடுத்த புதுக்கோட்டை ஞானசிகாமணி நகரில் தேங்கிய மழைநீரால் தெருக்கள் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. எனவே அங்கு சாலை, வாறுகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமன், புதுக்கோட்டை.
Related Tags :
Next Story