நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 21¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.
நாமக்கல்:
உழவர் சந்தை
நாமக்கல்லில் கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று 17¾ டன் காய்கறிகள் மற்றும் 4 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 100-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 3 ஆயிரத்து 680 பேர் வாங்கி சென்றனர்.
விலை விவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.74-க்கும், கத்தரி கிலோ ரூ.90-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.70-க்கும், புடலங்காய் கிலோ ரூ.70-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.70-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.70-க்கும், கேரட் கிலோ ரூ.80-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.60-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.50-க்கும், இஞ்சி கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்ன வெங்காயம் கிலோ ரூ.45-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
கடந்த வாரம் கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.16 குறைந்து கிலோ ரூ.74-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.30 குறைந்து கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து இருப்பதால், அவற்றின் விலை குறைந்து இருப்பதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story