நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 32 ஏரிகள் நிரம்பின-விவசாயிகள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழைக்கு 32 ஏரிகள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
32 ஏரிகள் நிரம்பின
நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே அதிக அளவு மழை பொழிவு இருந்தது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதமே சராசரி மழைபொழிவு கிடைத்து விட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பின.
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மாவட்டத்தில் மொத்தம் 79 ஏரிகள் உள்ளன. இவற்றில் 30 ஏரிகள் ஏற்கனவே நிரம்பின. தற்போது பொன்னார்குளம் மற்றும் அகரம் என மேலும் 2 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதனால் தொடர் மழைக்கு இதுவரை நிரம்பி உள்ள ஏரிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்து உள்ளது. ஏரிகள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு
புதுக்குளம், அரூர் ஏரிகள் 75 சதவீதமும், கோவிந்தம்பிள்ளை, செவந்திப்பட்டி, கருமாபுரம் ஆகிய 3 ஏரிகள் 50 சதவீதமும், 7 ஏரிகள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளன. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அதிக எண்ணிக்கையில் ஏரிகள் நிரம்பி இருப்பதால் விவசாய பணிகள் ஆங்காங்கே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே சமயம் நடுப்பட்டி, பட்டணம், அணைப்பாளையம் உள்ளிட்ட 34 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. இதற்கு இந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பே காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story