தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்தி விழா குரும்பர் இன மக்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்திவிழாவையொட்டி குரும்பர் இனமக்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் கனகதாசர் ஜெயந்திவிழாவையொட்டி குரும்பர் இனமக்கள் தலை மீது தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கனகதாசர் ஜெயந்தி விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் குரும்பர் சங்கம் மற்றும் ஸ்ரீகனகஜோதி சேவா சமிதி சார்பில் கவியரசர் ஸ்ரீகனகதாசரின் 534-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகனகதாசர் பல்லக்கு மற்றும் குல தெய்வங்களை குரும்பர் இனமக்கள் பாரம்பரிய கலாசார முறைப்படி டொல்லு குணிதா, வீரகாசை, வீரபத்ர குணிதா ஆகிய நடனங்களுடன் மேளதாளங்கள் முழங்க நகரின் வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து வீரபத்ர சாமி, ஸ்ரீசிக்கம்மா சிவலிங்கேஸ்வரி தேவி, ஸ்ரீதொட்டம்மா ஜெகதீஸ்வரி தேவி, சிக்கவீரம்மா தேவி, லிங்கேஸ்வர சாமி, உள்ளிட்ட சாமிகளை வரிசையாக வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து குரும்பர் இனமக்கள் தலை மீது தேங்காய்களை உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தலை மீது தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் தேன்கனிக்கோட்டை, ஓசூர், கெலமங்கலம், தளி, அஞ்செட்டி மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த குரும்பர் இன மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் மாநில குரும்பர் இன தலைவர் பாபண்ணா, குரும்பர் இன சங்க தலைவர் திம்மராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் எளயப்பா, முரளி, குரும்பர் சங்க சமுதாய தலைவர் சிக்கண்ணா, வக்கீல் ரவீந்திரன் மற்றும் சின்ன பில்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story