தர்மபுரியில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை கணவர் மீது புகார்


தர்மபுரியில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் தற்கொலை கணவர் மீது புகார்
x
தினத்தந்தி 12 Dec 2021 10:43 PM IST (Updated: 12 Dec 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

தர்மபுரி:
தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
அடிக்கடி தகராறு
தர்மபுரி அண்ணாமலை கவுண்டர் தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கும், திருச்சி மாவட்டம் புத்தூரை சேர்ந்த சூர்யா (வயது 29) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனிடையே கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி நடந்த தகராறில் மனமுடைந்த சூர்யா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூர்யாவை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்துவமனையிலும், தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுதொடர்பாக சூர்யாவின் சகோதரர் சிவப்பிரகாசம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
கோவிலில் திருமணம்
அந்த புகார் மனுவில், எனது அக்காவிற்கும், சென்னையை சேர்ந்த விக்ரம் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணமான ஒரு மாதத்தில் உடல் நலக்குறைவால் விக்ரம் இறந்துவிட்டார். எனது அக்கா சூர்யா திருச்சி வந்து விட்டார். இதனிடையே இளங்கோவின் சகோதரி ராஜேஸ்வரியின் வீடு எங்கள் வீட்டின் அருகே உள்ளது. அவரது வீட்டுக்கு இளங்கோ அடிக்கடி வருவார். அப்போது எனது அக்காவிற்கும், இளங்கோவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி எனது அக்காவும், இளங்கோவும் தர்மபுரியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நாள் முதல் எனது அக்காவை இளங்கோ அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். மேலும்  அவரை தகாத வார்த்தைகளால்  கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த எனது அக்கா சூர்யா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனது அக்கா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story