குளச்சலில் குடிநீர் கிணற்றில் மண்ணை கொட்டி மூட முயன்றவர்கள் அதிகாரிகள் வந்ததும் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சலில் குடிநீர் கிணற்றில் மண்ணை கொட்டி மூட முயன்றவர்கள் அதிகாரிகள் வந்ததும் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
x

குளச்சலில் குடிநீர் கிணற்றில் மண்ணை கொட்டி மூட முயன்றவர்கள் அதிகாரிகள் வந்ததும் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குளச்சல், 
குளச்சலில் குடிநீர் கிணற்றில் மண்ணை கொட்டி மூட முயன்றவர்கள் அதிகாரிகள் வந்ததும் தப்பி ஓடினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடிநீர் கிணறு
குளச்சலில் நரிக்கல் பாம்பூரி வாய்க்கால் கரையில் நகராட்சி குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணறு மூலம் சைமன்காலனி ஊராட்சி, குளச்சல் நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 
இந்தபகுதி பொதுமக்களுக்கு குழித்துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால், இந்த கிணற்றில் இருந்து குடிநீர் எடுப்பதை ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தியது. ஆனால் கோடை காலத்தில் அந்த பகுதி விவசாயிகள் இந்த கிணற்று நீரை  மோட்டார் மூலம் உறிஞ்சி பயன்படுத்தி வந்தனர். 
குப்பைகள் கொட்டினர்
இந்த கிணற்றில் சில நாட்களுக்கு முன்பு சிலர் இரவில் குப்பைகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த சிலர் கிணற்றில் திடக்கழிவு, மண் போட்டு மூட முயற்சித்ததாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து தகவல் அறிந்த கல்குளம் தாசில்தார் பாண்டியம்மாள், குளச்சல் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ராஜா ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது கிணற்றை மூட முயன்றவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தாசில்தார் விசாரணை நடத்தினார். 
இந்த நிலையில் குளச்சல் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் கிணற்றை மூட முயன்றவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story