கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு விழா


கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு விழா
x
தினத்தந்தி 12 Dec 2021 11:12 PM IST (Updated: 12 Dec 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணர் கோவிலில் ஆண்டு விழா

தளி, 
உடுமலையை அடுத்த சின்னவாளவாடி கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. இங்கு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணர் தம்பதி சகிதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பழமை வாய்ந்த இந்த கோவிலில் நேற்று சிறப்பு பூஜையுடன் ஆண்டுவிழா உற்சவம் தொடங்கியது. அப்போது பஜனைக்குழுவினர் இசைக்கு ஏற்ப பெண்கள் பக்திப்பாடல்களை பாடியவாறு கோலாட்டத்தில் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
2-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு சுதர்சன ஹோமமும் 10 மணிக்கு திருமஞ்சனம் மற்றும் திவ்ய அலங்கார ஆராதனைகள் பஜனை நிகழ்ச்சியுடன் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சகிதமாய் வேணுகோபால கிருஷ்ணர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். பின்னர் அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Next Story