பஸ் மீது லாரி மோதியதில் 11 பேர் காயம்
பஸ் மீது லாரி மோதியதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 11 பேர் காயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை
பஸ் மீது லாரி மோதியதில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 11 பேர் காயம் அடைந்தனர்.
சபரிமலைக்கு
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் பார்வதிபுரம் தாலுகாவில் உள்ள பாலகுடபா கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால்ராவ் (வயது 38). இவர், தனது சுற்றுலா பஸ்சில் பார்வதிபுரத்தை சேர்ந்த 19 பேரை ஏற்றிக் கொண்டு சபரிமலைக்கு சென்றார்.
பின்னர் அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர்.
திருவண்ணாமலை காமராஜர் சிலை பகுதியில் இருந்து திருமஞ்சன கோபுரம் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென பஸ் மீது மோதியதில் பக்கத்தில் இருந்து மின் கம்பத்தின் மீது பஸ் சாய்ந்து நின்றது.
11 பேர் காயம்
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story